பிஎஸ்என்எக்கு 4ஜி சேவை, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டில்லி:

ஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்தில், ஊழியர் களுக்கு விருப்ப ஒய்வு கொடுக்கவும்,  பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி உரிமம் வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் உள்பட பல்வேறு பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி,  பிஎஸ்.என்.எல். மற்றும் எம்டி.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத்துறை நிறுவனங்களான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை இறுதியில் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் ஆர்ஸ்பிரசாத் மத்திய அமைச்சரவை  கூட்டத்தில் தெரிவித்தார். எம்.டி.என்.எல் பி.எஸ்.என்.எல் துணை நிறுவனமாக செயல்பட உள்ளது. பி.எஸ்.என்.எல். 4 ஜி ஸ்பெக்ட்ரம் டெலிகாம் பிஎஸ்இ (பொதுத்துறை நிறுவனங்கள்) க்கு ஒதுக்கப்பட உள்ளது  என்று கூறியவர், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் (தன்னார்வ ஓய்வூதிய திட்டம்) தொகுப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது

மேலும்,   புதிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளை தொடங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும்,   புதிய பெட்ரோல் பங்க் திறக்க அனுமதிப்பதால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் அங்கீகரிக்கப்படாத வீடுகளில் வாழும் 40 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கோதுமை, பார்லி உள்ளிட்ட 6 விவசாய பொருட்களுக்கான 2019-20ஆம் ஆண்டு விலை நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள அடிப்படை ஆதார விலை நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘