ஸ்பீடு செஸ் கிராண்ட் பிரிக்ஸ் – இறுதிக்கு முன்னேறினார் கொனேரு ஹம்பி!

பெங்களூரு: ‘ஸ்பீடு செஸ்’ சாம்பியன்ஷிப்பின் 4வது கிராண்ட் பிரிக்ஸ் பிரிவின் இறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் கொனேரு ஹம்பி.

பெண்களுக்காக ஆன்லைன் முறையில் நடத்தப்படும் போட்டியாகும் இது. இது 4 கிராண்ட்பிரிக்ஸ் பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மொத்தம் 21 பேர் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு கிராண்ட்பிரிக்ஸ் பிரிவிலும், நாக்-அவுட் முறையில் மொத்தம் 16 பேர் மோதுவர். நான்காவது கிராண்ட்பிரிக்ஸ் பிரிவின் அரையிறுதியில், உலகின் நம்பர் 2 அந்தஸ்திலுள்ள இந்தியாவின் கொனேரு ஹம்பி – உலகின் நம்பர் 1 நிலையிலுள்ள சீனாவின் ஹோ யிபான் மோதினர்.

இதில், சீன வீராங்கனையை 6-5 கணக்கில் வெற்றிகொண்ட ஹம்பி, இறுதிப் போட்டியில் நுழைந்தார்.