ஸ்பீடு செஸ் – அரையிறுதியோடு வெளியேறினார் வைஷாலி!

சென்னை: ‘ஸ்பீடு’ செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழகத்தின் வைஷாலி, பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார்.

ஆன்லைன் முறையில், பெண்களுக்கான ‘ஸ்பீடு’ செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 22 பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு கிராண்ட் பிரிக்ஸ் பிரிவிலும் மொத்தம் 16 பேர் நாக்-அவுட் முறையில் மோதுவர்.

இதில் பங்கெடுத்த தமிழக வீராங்கனை வைஷாலி, தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டார். அரையிறுதிக்கு முன்னேறிய அவர், அப்போட்டியில் உக்ரைன் நாட்டின் உஷேனினாவை எதிர்கொண்டார்.

ஆனால், வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4.5 – 5.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.