ஆயுத செலவுக்கு பதில் கொரோனாவை தடுக்க செலவு செய்யுங்கள் : போப் ஆண்டவர்

வாடிகன்

வ்வொரு நாடும் ஆயுதங்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீன நாட்டில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.   இதுவரை 61.84 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு அதைல் 3.71 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.  கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிய உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கத்தோலிக்க தலைவரான வாடிகன் நக்ரில்  போப் ஆண்டவர் என அழைக்கப்படும் கத்தோலிக்க தலைவர்  போப் பிரான்சிஸ் நேற்று ஒரு பிரார்த்தனை நிகழ்வில் கலந்துக் கொண்டார்.   கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு நடந்த இந்தப் பிரார்த்தனை நிகழ்வில் சுமார் 130 க்கும் மேலானோர் கலந்துக் கொண்டனர்.   இவர்களில் பெரும்பாலானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் ஆவார்கள்.

போப் பிரான்சிஸ், ”உலகத் தலைவர்கள் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். இப்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.  அத்துடன் நீண்டகால பொருளாதார மற்றும் சமூகத் தீர்வுகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.  ஒவ்வொரு நாடும் ஆயுதங்களுக்குச் செலவழிக்கும் தொகையினை கொரோனாதொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்“ என்று தனது உரையில் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி