மூன்று புளோரிடா தொகுதிகளில் நன்கொடையாக கொடுக்கப்பட்ட விந்தணு சிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாமென அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எச்சரித்துள்ளது.

“விந்து தானமாகக் கொடுக்கப்படும் போது அது பல காலத்திற்கு உறைந்த நிலையில் சேமிக்கப்படும். இது திசு வங்கிகளில் சேமிக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகச் சிகா வைரஸை அவசியமாகச் செயல்படவிடாமல் செய்யவில்லை ஆனால் மக்கள் இதைப் பற்றி அறிய வேண்டும்,”என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் பையாலஜிக்ஸ் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான டாக்டர் பீட்டர் மார்க்ஸ் கூறினார். மேலும் அவர், இந்தத் தகவல் தெரிந்தவர்கள் மற்ற இடங்களிலிருந்து விந்துக்களைத் தானமாகப் பெற உதவியாக இருக்கும்”.

புளோரிடாவின் மியாமி-டேட், பாம் பீச் மற்றும் பிரோவர்ட் மாவட்டங்களில் உள்ள 12 விந்து வங்கிகள் தவிர வேறு வங்கிகள் அனைத்தும் வைரஸ் பாதிக்கப்படாத இடங்கள் என்று அறிவிக்கப்பட்டன.

அமெரிக்காவில் வைவுட் பகுதியில் முதன்முதலில் வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்ட பிறகு, மியாமி-டேட் கவுண்டியை மட்டும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு நிறுவனம் அறிவுறுத்தியது. பின்னர் அந்தப் பகுதி சிகா வைரஸ் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது.

எனினும், சிடிசி இப்போது பாம் பீச் மற்றும் பிரோவர்ட் மாவட்டங்களில் உள்ள அனைவரையும் வைரஸ் பாதிப்புக்குள்ள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதென எச்சரிக்கை செய்துள்ளது.

சிகா வைரஸ் உள்ளவர் அவருக்குத் தெரியாமலேயே அவ்வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம், ஏனெனில் 80% பாதிக்கப்பட்டோருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அறிகுறிகள் ஏற்படும் போது, காய்ச்சல், சொறி, மூட்டு வலி மற்றும் சிவப்பான கண்கள் ஆகியவை ஏற்படலாம், மற்றும் அவை ஒரு சில நாட்கள் முதல் சுமார் ஒரு வாரம்வரை நீடிக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் தான் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளனர் ஏனெனில் அவர்கள் தன்னை அறியாமல் சிகா வைரஸை அவர்களின் கருவிற்கு பரப்பிவிடலாம், அது கருச்சிதைவு மற்றும் வாழ்நாள் முழுதும் நீடிக்கக்கூடிய நரம்புத் தொடர்பான பற்றாக்குறை உட்பட பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்.

சிகா வைரஸ் பால்வினையால் தொற்றக்கூடும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் அல்லது கருவுற முயற்சி செய்யும் பெண்கள் பாதிக்கப்பட்ட அல்லது அந்த வைரஸ் உள்ள பகுதியில் வாழ்ந்த/அங்குப் பயணம் செய்த கணவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சிடிசி அதிகாரிகள், அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும், விந்து தானம் மூலம் வைரஸ் பரவியதாக இதுவரை எந்த அறிக்கையும் வெளிவரவில்லை என்றும் கூறினர்.

சிகா வைரஸினால் ஒரு ஆண் பாதிக்கப்பட்டு பிறகு, மூன்று மாதங்கள் வரை அவரின் விந்தில் வைரஸின் தடையங்கள் இருக்கும் என்றும் ஆனால் அதை மக்கள் துல்லியமாக நினைவு கூர முடியாமல் போயிருக்கலாம் என்றும் சிடிசி அலுவலகத்தின் இரத்த, உறுப்பு மற்றும் பிற திசு பாதுகாப்பு இயக்குனர் மற்றும் சிடிசி சிகா அவசர குழுவைச் சார்ந்த டாக்டர் மத்தேயு க்யூனர்ட் கூறினார்.

அமெரிக்காவில் இரத்த தானத்தின் போது எப்போதும் வைரஸ் இருக்கிறதா இல்லையா எனச் சோதனை செய்யப்படுவது போல், விந்தில் வைரஸ் உள்ளதா இல்லையா எனச் சோதனை செய்ய எந்தவொரு சோதனையும் இல்லை. இப்போது இருக்கும் சோதனை ஆராய்ச்சி கட்டத்தில் உள்ளது, மேலும் அது எவ்வளவு துல்லியமானது என மதிப்பிடப்பட்டு வருகிறது, இதனால் தான் இந்த மாவட்டங்களில் உள்ள ஆண்கள் தங்களின் விந்தை தானம் செய்யக் கூடாது. அவர்கள் நன்கொடையாக கொடுத்த விந்து வரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.