டெல்லி: இந்திய கிரிக்கெட்டில் இருந்து தற்போது சுழற்பந்துவீச்சு அழிந்து கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் முரளி கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக்.  சுழற்பந்துவீச்சாளராக இருந்த அவர் இந்திய அணிக்காக 37 ஒருநாள் போட்டிகளிலும், 8 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியவர்.

உலக கோப்பை தொடரின் போது விஜய் சங்கர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், களத்தில் இருக்கும் வீரர்களுக்கு கூல்டிரிங்ஸ் வகைகளை ஓடி போய் கொடுத்ததை கண்டு, பொங்கினார். அவரது கருத்து பரவலாக பேசப்பட்டது.

இந் நிலையில், இந்திய கிரிக்கெட்டில் இருந்து சுழற்பந்துவீச்சு என்பது சாவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியதாவது: நமக்கு இன்னும் ஒரு முரளிதரனோ, ஒரு ஷேன் வார்னேவோ, வெட்டோரியோ கிடைக்கவில்லை.

ஒரு காலத்தில், மாநில அணிகளில் கூட ஸ்பின்னர்கள் இடம் பெறுவதில் கடும் போட்டி நிலவியது. ஆனால் இப்போது நிலைமை அதுபோன்று இல்லை. அதாவது பழைய காலத்தில் இருப்பது போன்ற தனித்துவமான ஸ்பின்னர்கள் அணியில் கிடையாது.

தரத்தில் எங்கேயோ குறை இருக்கிறது. 2011ம் ஆண்டு முதல் 2014 வரை ஆஸ்திரேலியா அணியுடன் 0-4, 0-4 என தோற்ற பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டம் மாறிவிட்டது. வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை சாய்க்கும் அளவுக்கு அது இருந்தது.

முன்னாள் விக்கெட் கீப்பர் தீப்தாஸ் குப்தாவும் அவரது கருத்தை ஆமோதித்து இருக்கிறார். டி 20 போட்டிகளால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அது தான் ஸ்பின்னர்களின் நிலைமைக்கு காரணம் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.