ஷிமோகா:
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பொது இடங்களில், சாலைகளில் எச்சில் துப்புவதற்கு தமிழகம் உள்பட பல மாநில அரசுகள்   தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஷிமோகா கார்ப்பரேஷன் பகுதியில் ஒருவர் சாலையில் எச்சில் துப்பியதால், அவருக்கு ரூ.500 அபராதம் மற்றும்  முகக்கவசம் அணியாமல் இருந்ததற்கு ரூ.100 என ரூ.600 உடடியாக அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தும்முவதாலும், இருமுவதாலும் பரவுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், வைரஸ் பரவல்   தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சாலைகளில் எச்சில் துப்பக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் டிஷிமோகா மாநகராட்சி பகுதியில் மைதீன் என்பவர் சாலையில் எச்சில் துப்புவதைக் கண்ட மாநகராட்சி அதிகாரிகள் அவரிடம் ரூ.500 அதிரடியாக அபராதம் விதித்தனர். மேலும் அவர் முக்கவசம் (மாஸ்க்) அணியாததால் அதற்கு ரூ.100 அபராதமும் சேர்த்து ரூ.600 அபராதம் உடடினயாக வசூலிக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.