ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ஆகஸ்டு 7ந்தேதிவரை ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின்

டில்லி:

ர்செல் மேக்சிஸ் வழக்கில்  ஆகஸ்டு 7ந்தேதிவரை ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்கி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான  ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் 31ந்தேதி ப.சிதம்பரம் மீது சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கார்த்தி  சிதம்பரம் மீது சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சிதம்பரத்தின் மீதும் துணை குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்ய இருப்பதன்  காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என எண்ணி, இன்று காலை முன்ஜாமின் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த டில்லி பாட்டியாலா நீதிமன்றம், ப.சிதம்பரத்தை  ஆகஸ்டு 7ந்தி வரை கைது செய்ய தடை விதித்து, முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ப.சி. மீதான குற்றப்பத்திரிகை குறித்து வரும் 31-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டில்லி உயர்நீதி மன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed