விளையாட்டு துறை: செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு! சட்டமன்றத்தில் வாழ்த்து

சென்னை:

3ஆண்டு சிறை தண்டனை காரணமாக பதவி விலகிய தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி யின் பொறுப்புகள் அனைத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையனக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த  பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு நீதி மன்ற தீர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர், அவர் வகித்து விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த விளையாட்டு துறை பொறுப்பை கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.