நார்வே மற்றும் ஹாங்காங் அரசின் நிதி உதவியில் உருவாக்கப்பட்டு, தற்போது சோதனையில் இருக்கும், மூக்கில் உறுஞ்சும் வகையிலான கொரோனா தடுப்பு மருந்தின் சோதனைகள் ஹாங்காங்கில் தொடங்கப்படவுள்ளன. மேலும் கோவிட் -19 ஐத் தடுக்க பாதுகாப்பான மற்றும் திறனுள்ள/பயனுள்ள தடுப்பு மருந்துகளை உருவாக்கும் பல்வேறு முயற்சிகளின் பட்டியலில் இதுவும் குறிப்பிடத்தக்க முயற்சி ஆகும்.

இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ள இது ஒரு இரட்டை தடுப்பு மருந்து ஆகும். அக்டோபரின் மத்தியில் அல்லது இறுதியில் மனித சோதனைகளைத் தொடங்கவுள்ள இந்தத் தடுப்பு மருந்து ஒரு நாசி வழி உறுஞ்சும் மருந்து ஆகும். ஆரம்ப கட்ட மருத்துவ சோதனையில் சுமார் 100 தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொற்று நோய்களின் தலைவரான யுயென் குவோக்-யுங் கூறினார். இந்தத் தடுப்பு மருந்து ஏற்கனவே சந்தையில் உள்ள நாசி ஸ்ப்ரே வகை காய்ச்சல் நோய்த்தடுப்பு மருந்துகளுக்கு ஒத்ததாக இருக்கும். இது பொதுவாக கொரோனா போன்ற சுவாசப் பாதை வழியாக நுழையும் வைரஸ்களின் நுழைவுப்பாதையான மூக்கினுள் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. “எங்கள் யோசனை என்னவென்றால், ஒரே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் -19 பாதுகாப்பு இரண்டையும் பெற நாங்கள் விரும்புகிறோம்,” என்று யுவான் ஒரு நேர்காணலில் கூறினார்.

ஜியாமென் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இந்தத் தடுப்பு மருந்தின் உருவாக்குனரான பெய்ஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தியல்  நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவிட் -19 க்கான மூக்கில் உறுஞ்சும் தடுப்பு மருந்தின் ஆய்வுகளை சீனா கடந்த மாதம் தொடங்கியது. இரட்டை காய்ச்சல்-கோவிட்- 19 தடுப்பு மருந்து வெப்பநிலை-பொறுத்து வளரும், பலவீனமான மற்றும் பிரதி-குறைபாடுள்ள காய்ச்சல் வைரஸை அடிப்படையாகக் கொண்டது. இது மேல் காற்றுப்பாதையில் மட்டுமே வளரும். அதன் டெவலப்பர்கள் வைரஸின் என்எஸ் 1 புரதத்தை நீக்கி மற்றும் SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்தின் ரிசப்டாருடன் இணையும் புரத்தின் ஒரு பகுதியை இணைக்கவும் மரபணு பொறியியலைப் பயன்படுத்தினர், யுயென் கூறினார். “பின்னர் அது விலங்குகளில் வேலை செய்கிறது என்பதை எங்களுக்கு நன்றாகக் காட்டியது,” என்று அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ்களிலிருந்து பாதுகாப்பதைத் தவிர, மூக்கில் சளி சவ்வு இருக்கும் இடத்தில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் செயல்முறையை நோக்கமாகக் கொண்டுள்ளது என யுயென் கூறினார். சயின்ஸ் ஃபிரைடே இதழில் வெளியிடப்பட்ட லண்டன் இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சி, சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க மக்களுக்கு உதவுவதற்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் செயல்பாடு மிக முக்கியமானது என்பதைக் குறிக்கிறது. “ஒரு மியூகோசல் தடுப்பு மருந்து ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்,” என்று யுயென் கூறினார். சீன மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று அடுத்த மாதம் முதல் கட்ட ஆய்வுக்கான பரிசோதனைக்கு தேவையான தடுப்பு மருந்துகளை தயாரிக்க உள்ளனர் என்றார். இந்த சோதனைகள் அதன் பாதுகாப்பையும் உகந்த அளவையும் நிரூபிக்க முயற்சிக்கும். சில மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் கிடைக்க தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.