புதுச்சேரியில் பரவும் மர்ம காய்ச்சல்: 70க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
புதுச்சேரி:
புதுச்சேரியின் பல பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் மர்ம காய்ச்சல் சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். மாநில சுகாதாரத்துறை சார்பில் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த மர்ம காய்ச்சல் அருகிலுள்ள கிராம பகுதிகளுக்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது. விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக இந்த காய்ச்சல் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.
பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.