மழை பாதிப்பு பற்றி தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சிரிக்கை

சென்னை:

ழை பாதிப்பு பற்றி தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்த்தாவது:

“ஏரிகள் நிரம்பியதாக வெளியாகும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை எந்த ஏரியும் முழு கொள்ளளவை எட்டவில்லை.

சமூக வலைத்தளங்களில் மழை பற்றி தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.