மாஸ்கோ: ஸ்புட்னிக்  வி கொரோனா தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரல் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டறிந்து வருகின்றன. இந் நிலையில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்து விட்டதாக ரஷியா அறிவித்து அதன் பெயர் ஸ்புட்னிக் வி என்றும் அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து, ரஷிய மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் இதுவரை 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்து உள்ளது.

ரஷியாவின் தடுப்பூசி பற்றிய சோதனைகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சோதனைகள் நடைபெற்று வருகின்றது.