தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் ஹரிஹரிஸ் இப்படத்தை இயக்குகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில், வில்லனாக நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஸ்ரீசாந்த், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.