விமலுடன் ஜோடி சேரும் ஸ்ரேயா …!

ஆர்.மாதேஷ் இயக்கும் ‘சண்டகாரி- தி பாஸ்’ படத்தில் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

‘மை பாஸ்’ என்னும் மலையாள படத்தைத் தழுவி தமிழில் ‘சண்டகாரி- தி பாஸ்’ திரைப்படம் உருவாகிறது.

பிரபு, சத்யன், கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், ‘மகாநதி’ சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் ‘மகதீரா’ தேவேந்தர் சிங் கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குருதேவ் ஒளிப்பதிவில் அம்ரீஷ் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆக்‌ஷன் காமெடி படமாக உருவாகி வருகிறது.