சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், பேட்டிங் செய்து வருகிறது கொல்கத்தா அணி. டாஸ் வென்ற ஐதரபாத் அணி, பெளலிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் இயான் மோர்கனை கேப்டனாக கொண்டுள்ளது கொல்கத்தா அணி. டேவிட் வார்னரை கேப்டனாக கொண்டுள்ளது ஐதராபாத் அணி. ஐதராபாத் அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். மேலும், புவனேஷ்வர் குமாரும் இடம்பெற்றுள்ளார்.

கொல்த்தா அணி சார்பில், துவக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் ஷப்மன் கில் களமிறங்கியுள்ளனர். ரானா, தற்போதைய நிலையில், 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். அதில் 7 பவுண்டரிகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கில், 9 பந்துகளில் 14 ரன்களை அடித்துள்ளார். அதில் 1 சிக்ஸர் & 1 பவுண்டரி அடக்கம். தற்போதைய நிலையில் அந்த அணி, 5.2 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை அடித்துள்ளது.