சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவி மெழுகு சிலை…!

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. ரஜினி, கமல் போன்ற தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்களுக்கு தாயானார் .

கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி மாரடைப்பாடல் துபாய் ஹோட்டலில் மரணமடைந்தார். இந்நிலையில் தற்போது மாடமே துஸ்ஸாட்ஸ் ( Madame tussauds ) அருங்காட்சியகத்தில் ஸ்ரீ தேவிக்கு மெழுகு சிலை அமைத்துள்ளார்கள்.

இந்த சிலையை நேற்று திறந்து வைத்தனர். இந்த விழாவில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் பங்கேற்று நினைவு நாளை கொண்டாடினார்கள்.

ஆனால் இந்த சிலை ஸ்ரீதேவி போல இல்லை என்றும் அவரின் மகள் ஜான்வி கபூர் போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி