கவலைகளைத் தீர்க்கும் காளிகாம்பாள் தரிசனம்

சென்னை

லைநகர் சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோவில் மிகவும் புகழ்பெற்றதாகும்.    இந்தக் கோவிலில் உள்ள ஈஸ்வரன் ஸ்ரீகமடேஸ்வரர்.   மற்றும் இங்குள்ள ஸ்ரீ முருகப் பெருமான் சன்னிதியும் புகழ் வாயந்தது ஆகும்.    இந்தக் கோவிலில் மூன்று அம்பிகையர் குடி கொண்டுள்ளதால்  பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்கின்றனர்

மூலவர் ஸ்ரீ காளிகாம்பாள்.   இந்த அம்மனை தரிசனம் செய்தாலே கவலைகள் தீரும் என்பது பக்தர்களின் அனுபவம் ஆகும்.   காளிகாம்பாள் இங்கே சாந்தமாக தரிசனம் தந்து அருள் பாலித்து வருகிறாள்.    இந்த அம்பாளை சத்ரபதி சிவாஜி வழிபட்டதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து ஸ்ரீதுர்க்கை அம்மன் தரிசனம் அளிக்கிறாள்.   ராகுகாலத்தில் அதுவும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த சன்னிதியில் கூட்டம் அதிகமாக இருக்கும்.   சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பெண்கள் அந்த நேரத்தில் எலுமிச்சம் பழத்தை விளக்காக ஏற்றி வழிபடுவது சிறப்பாகும்.

மூன்றாவதாக ஸ்ரீபிரத்யங்கரா தேவியின் சுதைச் சிற்பம் இங்கு இருக்கிறது.   செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும்  இந்த அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.   காளிகாம்பாளையும் பிரத்யங்கராதேவியையும் வழிபட்டால் அனைத்து நலன்களும் சேரும்.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு சென்று செவ்வரளி மாலை சார்த்தி வ்ழிபட்டால் நலமும் வளமும் பெற்று சகல சுகங்களும் ஐஸ்வரியங்களும் அளித்து கவலைகளை காளிகாம்பாள் நீக்குவாள் என்பது பக்தர்களின் அனுபவம் ஆகும்

Leave a Reply

Your email address will not be published.