கொழும்பு:

முகத்தை மூடியவாறு ஆடை அணிய இலங்கை அரசு தடை விதித்துள்ளது.


இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உளவுத்துறை முன்கூட்டியே இது குறித்து தகவல் கொடுத்தும் அரசு மெத்தனமாக இருந்துவிட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருந்தார்.

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இலங்கை அதிபர் மைத்ரிய சிரிசேனா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

திகளை வேட்டையாடும் நடவடிக்கையில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, முகத்தை மூடியவாறு ஆடை அணிய இலங்கை அரசு தடை விதித்துள்ளதாக, இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.