கொழும்பு: பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது.

கொரோனா வைரசின் தாக்கம் இன்னமும் நீடிக்கும் நிலையில், பிரிட்டனில்  புதிய வகை வைரஸ் பரவி அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனாவை விட அதிக வீரியமிக்க வைரசாக உருமாறி உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

பிரிட்டனில் இந்த அதி தீவிர கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால்  லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு இந்தியா,கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

இந் நிலையில், இலங்கையும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. நாளை அதிகாலை 2 மணிமுதல் மறு அறிவிப்பு வரும் வரை பிரிட்டன் விமானங்களின் சேவைக்கு தடை விதித்துள்ளதாகவும் இலங்கை அறிவித்துள்ளது.