கொழும்பு:

டந்த மாதம்  நியூசிலாந்து மசூதியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையிலுள்ள  தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்பில் 321  பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கி உள்ளது.

இந்த குண்டுவெடிப்பு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில்,   பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம்  நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங் கள் மீது பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை  இணை அமைச்சர் ருவர் விஜிவர்த்தனே தெரிவித்துள்ளார் . ஆரம்பகட்ட விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.  மேலும், குண்டுவெடிப்பு தாக்குதலில் 38 வெளிநாட்டினர் உட்பட 321 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்

இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே 

கிறிஸ்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னணி யில் நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இருப்பதாக இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக  கடந்த 14 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை எச்சரித்தும், சிறிசேனாவின் பொறுப்பில் உள்ள பாதுகாப்புத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றமச்சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இலங்கையை சேர்ந்த செஹ்ரான் ஹாஷிம் என்பவன் மூளையாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.  இந்த இளைஞர்களிடம் விசாரித்த வகையில், பெரும்பாலோர் செஹ்ரான் ஹாஷிம் என்பவனின் எழுத்துக்கள் பேச்சுக்களால் கவரப்பட்டவர்கள் தான்.  பகிரங்கமாகவே ஐஎஸ் ஆதரவு நிலையை எடுத்து ஆயுதம் தூக்கி எதிரிகளை தாக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தான் இவன் மீது இலங்கை முஸ்லிம்களும் காவல்துறையும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை என்று கூறிவர்,  இலங்கை சம்பவம் தமிழக முஸ்லிம்களுக்கும் ஒரு பாடம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இலங்கை நாடாளு மன்றத்தில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாக்குதலையொட்டி இன்று இலங்கை அரசு துக்கம் அனுசரிக்கிறது அதன் காரணமாக  அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.