இலங்கையின் கைது படலம் தொடர்கிறது! 10 மீனவர்கள் சிறைபிடிப்பு!

சென்னை,

டுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிரந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்போது ஐஸ்டின் என்பவரின் படகு பழுதாகி நின்றுள்ளது.

அப்போது அங்கு வந்து இலங்கை கடற்படையினர் படகில் இருந்த 10பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

ஏற்கனவே கடந்த 6ந்தேதி இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டால், தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற இளைஞர் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

அதை யடுத்து, தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளுடன்  இன்று மத்திய அமைச்சர் சுஷ்மா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில், இலங்கை மீண்டும் தமிழக மீனவர்களை பிடித்துச்சென்று அட்டூழியம் செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.