கொழும்பு

லங்கையில் தற்போது இருக்கும் இஸ்லாமிய குடும்பச் சட்டத்துக்கு பதில் அனைத்து மதத்துக்குமான பொதுச் சட்டம் இயற்றுவது பற்றி விவாதம் நடந்து வருகிறது.

இலங்கையில் 1951ல் இயற்றப்பட்ட இஸ்லாமிய குடும்பச் சட்டத்தின்படி, காஜி எனப்படும் சமுதாயத் தலைவரே நீதிபதியாக தீர்ப்பு வழங்கலாம்.  அதே நேரத்தில் பெண்களுக்கு காஜி ஆகும் உரிமை கிடையாது.

இஸ்லாமிய குடும்பச் சட்டத்தின் படி பெண்ணுக்கு குறைந்த பட்ச திருமண வயதோ, மற்றும் திருமணத்துக்கு பெண்ணின் சம்மதமோ தேவை இல்லை.  காஜியின் அனுமதி பெற்றால் 12 வயது சிறுமியையும் மணப்பெண் ஆக்கலாம்.   விவாகரத்துக்கும் தனி சட்டங்கள் உள்ளன.   விவாகரத்து சட்டம் ஆணுக்கு சாதகமாகவே உள்ளது.  பெண் விவாகரத்து கோரினால் காஜி அனுமதித்தால் மட்டுமே விவாகரத்து கிடைக்கும்.  .   இஸ்லாமியச் சட்டப்படி ஒரு ஆண் மற்ற மனைவிகளுக்கு தெரிவிக்காமலும், அனுமதி இல்லாமலும் எத்தனை திருமணங்களும் செய்துக் கொள்ளலாம்.  அதை பெண்கள் எதிர்க்க முடியாது.

சில பழமைவாத இஸ்லாமியர்கள் குரானில் குழந்தைத் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என வாதிடுகிறார்கள். மேலும் இஸ்லாமிய குடும்ப சட்டமே தங்களுக்கு உகந்தது என கூறுகின்றனர்.  இந்த சட்டத்தை எதிர்க்கும் சில இஸ்லாமியர்கள் இருந்தாலும் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவே,

இந்த சட்டங்களை மாற்ற வேண்டும் என இஸ்லாம் மதத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்தனர்..

இதனால் 2009 ல் அரசினால் அமைக்கப் பட்ட அனைத்து பிரதிநிதிகளின் அமைப்பு விவாத்ததிலேயே இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது,  சமீபத்தில் நடந்த அமர்வு விவாதங்களிலும் ஏதும் முடிவு வரவில்லை.  அந்த அமைப்பின் சேர்மன் கூறுகையில் பழமைவாதிகளுக்கு பரந்த மனப்பான்மை வந்தால் பொதுச்சட்டம் நிறைவேற்றப்பட்டு பெண்கள் நலம் பெருவார்கள் என கூறி இருக்கிறார்.  அது விரைவில் நடைபெறலாம் என்னும் நம்பிக்கையையும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்று

இலங்கையின் வட கிழக்குப் பகுதிய சேர்ந்த ஒரு 17 வயது முஸ்லிம் பள்ளி மாணவிக்கு கட்டாயக் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது.  அதை விரும்பாத அந்த மாணவி, தனது தாயாரிடம் இருந்த டயாபடீஸ் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.  அவர் சிகிச்சையில் இருந்த நேரத்தில் அவரது திருமணத்தை பெற்றோர் பதிவு செய்து விட்டனர்.

இந்த நிகழ்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதன் மூலம் பொதுச் சட்ட ஆதரவாளர்கள் தங்கள் குரலுக்கு மேலும் பலம் கூடியுள்ளதாகச் சொல்கிறார்கள்.