துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி: இலங்கை முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா கைது

கொழும்பு:

ழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் இறந்த நிலையில்,  இலங்கை முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை முன்னாள் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பம் காரணமாக, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவை டிஸ்மிஸ் செய்துவிட்டு, முன்னாள் அதிபரான ராஜபக்சேவை பிரதமராக  அதிபர மைத்திரி சிறிசேனா நியமனம் செய்தார்.

அதிபர் சிறிசேனாவில் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், திய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட  ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், நானே பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்கே அறிவித்து உள்ளார். அரசியல் சட்டப்படி தன்னை நீக்க முடியாது என்று கூறி உள்ளார். அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற சபாநாயகரும் குரல் கொடுத்துள்ளார். இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தையும் முடக்கி உள்ளார் அதிபர் சிறிசேனா.

இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவின் அமைச்சரவையில், பெட்ரோலியம் மற்றும் வனத்துறை பொறுப்பு வகித்து வந்தவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அர்ஜூனா ரணதுங்கா, தனது அலுவலகத்துக்கு  செல்ல முயன்றார்.

ஆனால், அவரை அங்கிருந்த அலுவலக  ஊழியர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அமைச்சரின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இரு ஊழியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அர்ஜூனா ரணதுங்காவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.