கொழும்பு:
லங்கையில் பாராளுமன்ற தேர்தல் இந்த மாதம் 25ந்தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், தேர்தல் 2 மாதத்துக்கு  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் தீவிரம் காட்டி வருகிறது. அங்கு இதுவரை 303 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
முன்னதாக அங்கு மார்ச் மாதமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் தளர்வு கொடுக்கப்பட்டது.   பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார விழிப்புணர்வோடு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அங்கு புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற தேர்தலையும் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
இதுகுறித்து  தேர்தல் ஆணையக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அருகில்,  வருகிற 25-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த  இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஜூன் 20-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.