கோத்தபய தலைமையிலான அரசின் இடைக்கால அமைச்சரவை இன்று பதவி ஏற்பு! இலங்கை அமைச்சர்கள் விவரம்

கொழும்பு:

லங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள்  இன்று பதவி ஏற்றனர்.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ராஜபக்சே சகோதரர் கோத்தபய ராஜபக்சே கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து,  பிரதமராக இருந்த ரணில் விக்கிரமிக்கே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த பதவியை  எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்த மகிந்த ராஜபக்சே கைபற்றினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபப்சே  தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தலைமையில் 16 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை  பதவி ஏற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் முழுமையான விபரம்!!

1.மஹிந்த ராஜபக்ச – பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனம், கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சர்.

2.நிமால் சிறிபால -நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர்.

3.ஆறுமுகம் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர்.

4.தினேஸ் குணவர்த்தன – வெளிவிவகாரம், திறன் மேம்பாட்டு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சர்.

5. டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்.

6.பவித்திரா வன்னியாராட்சி – சுகாதாரம், சுதேச மருத்துவம், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர்.

7.பந்துல குணவர்த்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்.

8.ஜானக பண்டார – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்.

9.சமல் ராஜபக்ச – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அ​மைச்சர்.

10.டலஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.

11.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.

12.விமல் வீரவங்ச – சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்.

13.மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்.

14.எஸ்.எம்.சந்திரசேன – சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்.

15.ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்.

16.பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

பதிவு: நிஷாந்தன் சுப்ரமணியம்