இலங்கை பிரதமர் ரணில் திடீர் இந்தியா வருகை!

 
டில்லி:

லங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே 3 நாள் பயணமாக நேற்று மாலை திடீரென இந்தியா வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்திய புலனாய்வு நிறுவனமான ரா (RAW) தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரி சிறிசேனா பரபரப்பு குற்றச்சாட்டு கூறி, உடனே அதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே திடீர் பயணம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்கும் ரணில், நாளை (20-ம் தேதி)  இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்யை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

இந்த பேச்சின்போது, இலங்கை அதிபர் சிறிசேனா கொலை முயற்சி குறித்த பேச்சு குறித்து விவரம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே  இந்தியா வருகை தந்துள்ள தாகவும், இரு நாடுகளுக்கு இடையே உறவு நீடிக்கும் என்றும் தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.