இலங்கை: தமிழர் பகுதிகளில் கனமழை, வெள்ளம்: 45 ஆயிரம் பேர் தவிப்பு

லங்கையில் தமிழர் பகுதிகல் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கின்றன.  45 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்து வெளியேறியிருக்கின்றனர்.

இலங்கையின்  தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்பாணம் மாவட்டங்களில் கடந்த  மூன்று தினங்களாக  கனமழை பெய்து வருகிறது. இதனால்  ஐந்து மாவட்டங்கள் மிதக்கின்றன.

மாங்குளம், இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகள் ததும்பி வழிகின்றன.வெள்ளப்பெருக்கால், முல்லைத் தீவுக்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 40 செ.மீ மழை பதிவாகி  இருக்கிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களில், 8 ஆயிரத்து 539 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 52 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

212 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.