நாற்பது வருடங்களுக்குப் பிறகு  முழுக்க  முழுக்க இலங்கை கலைஞர்கள் பங்குபெறும் திரைப்படம் ‘‘கோமாளி கிங்ஸ்’’

நகைச்சுவை, காதல், த்ரில் என்று ஜனரஞ்சமாக உருவாகியிருக்கிறது.

பிக்சர் திஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பு. ஆரோக்யா இன்டர்நேஷனல் எம்.என்டர்டைன்மெண்ட், வைன் க்ரியேடிவ் நெட்ஒர்க்ஸ் இணைத் தயாரிப்பு.

கதை–திரைக்கதை: கிங் இரட்ணம், கலாபூசனம் ராஜா கணேசன், தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேசனுடன் கிங் இரட்ணமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இலங்கையில் புழக்கத்தில் இருக்கும்  பல்வேறு தமிழ் பேச்சு வழக்குகளை கதாபாத்திரங்கள் பேசி நடிப்பது வித்தியாசமான முயற்சி.

கணேஷ் விஜய்நாயகம் (ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனம்), வக்கீல் செல்வஸ்கந்தன் (சிலோன் தியேட்டர்ஸ்) வழிகாட்டுதலில் தயாராகி வரும் படம். தாரணி ராஜ சிங்கமும் ஒரு தயாரிப்பாளர்.

இந்தப் பட  ஆக்கத்தை, பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்  பி.எச்.அப்துல் ஹமீது வழி நடத்துகிறார்.