Random image

டில்லி: ஜனாதிபதி, பிரதமருடன் இலங்கை எம்.பி.க்கள் குழு சந்திப்பு

டில்லி:

இலங்கை எம்.பி.க்கள் குழுவினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உள்பட 11 எம்.பி.க்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள டில்லியில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்து பேசினர்.

பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பின் போது, இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள் விவகாரம் குறித்து பேசியுள்ளனர். அதோடு 13வது அரசியல் சாசன திருத்தம் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.