பந்து சேதமாகிய விவகாரம் : மைதானத்தில் இலங்கை வீரர்கள் போராட்டம்

                                ஸ்ரீலங்கா அணியுடன் ஜவகல் ஸ்ரீநாத்

செயிண்ட் லூசியா

ந்து சேதமாகிய விவகாரம் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சுமார் 90 நிமிடங்கள் விளையாடாமல் மைதானத்தில் போராட்டம் நடத்தி உள்ளனர்.

செயிண்ட் லூசியாவில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று நடந்தது.   இதில் பந்து சேதமாகியதாக ஒரு விவகாரம் கிளம்பியது.   அதை ஒட்டி நடுவர்கள் இலங்கை அணியை புதிய பந்து கொண்டு விளையாடவும் இதற்கு ஐந்து ரன்கள் பெனால்டி அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.

முன்னதாக முதல் இன்னிங்சில் மேற்கிந்திய அணி விளையாடிய பந்து சேதமாகியதால் பந்தை மாற்ற அம்பயர்கள் முடிவு செய்தனர்.   அந்த பந்து 44.3 ஓவர்களில் வீசப்பட்ட பந்தாகும்.   அது குறித்து முடிவு எடுக்கும் வர இலங்கை அணி வீரர்களை அவர்கள் அறையில் காத்திருக்க நடுவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதன் பிறகு அந்நாட்டு நேரப்படி காலை 10.50 மணிக்கு வந்த இலங்கை அணி ஏற்கனவே 50 நிமிடங்கள் ஆகியும் விளையாட்டை துவங்காமல் இருந்தனர்.   அத்துடன் பந்து மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மைதான ஓரத்தில் நின்று சுமார் 40 நிமிடங்கள் போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இலங்கை அணியினருடன் இந்தியாவை சேர்ந்த நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் பேச்சு வார்த்தை நடத்தினார்.    பேச்சு வார்த்தை முடிந்த பிறகு 14 ஆவது ஓவரில் பந்து மாற்ற ஒப்புக்கொண்டு இலங்கை அணியினர் விளையாட்டை தொடங்கினார்கள்.