நைஜீரியா பெண் பாலியல் பலாத்காரம்….இலங்கை கிரிக்கெட் வீரரிடம் போலீஸ் விசாரணை

கொழும்பு:

நார்வே பெண் பாலியல் பலாத்கார வழக்கில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கை அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருப்பவர் தனுஸ்கா குணதிலகா (வயது 27). தென் ஆப்ரிக்கான அணியினர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக இரு அணி வீரர்களும் கொழும்பு ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது குணத்திலகாவின் நண்பர் சந்தீப் ஜூட் செலியா (வயது 26) என்பவர் நைஜீரியா பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இவரை தொடர்ந்து குணதிலகாவிடம் போலீசார் கடந்த 24ம் தேதி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,‘‘சம்பவம் நடந்த அன்று நான் நன்றாக தூங்கிவிட்டேன். நைஜீரியா பெண்ணுக்கும், எனது நண்பருக்கும் இடையில் நடந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பாஸ்போர்ட் பெற்றுள்ள செலியா, இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர். ‘‘கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை குணத்திலகா முன்னிலையில் இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்’’என்று நைஜீரியா பெண் அளித்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்ப்டடார்.

குணத்திலகா மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. புகார் அளித்த பெண் இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டார். எனினும் தென் ஆப்ரிக்காவுடனான ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து குணத்திலகா நீக்கப்பட்டுள்ளார்.