நவம்பர் 16-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல்! தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொழும்பு:

லங்கையில்  நவம்பர் 16-ம் தேதி இலங்கை அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என்று இலங்கை தலைமை தேர்தல் அதிகாரி மஹிந்தா தேஷப்ரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இலங்கையின் தலைமை தேர்தல் ஆணையர்  மஹிந்தா தேஷப்ரியா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்   அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது என தெரிவித்து உள்ளார்..

இலங்கையின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ராஜபக்சேவின் எஸ்எல்பிபி கட்சி சார்பில், அவரது சகோதரர் கோத்தபயே ராஜபக்சே அதிபர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. அதேபோல், அனுரா குமாரா திஷனாயகேவும் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் போட்டியிட தயராக உள்ளார்.

இலங்கையின் பிற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முண்னணி மற்றும் எஸ்எல்எப்பி (தற்போதைய அதிபர் ஸ்ரீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி)  ஆகிய கட்சிகள் இன்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.