என்னை கொல்ல இந்தியா சதி என சிறிசேனா கூறவில்லை: இலங்கை அரசு மறுப்பு

கொழும்பு:

ந்திய புலனாய்வு நிறுவனமான ரா (RAW) தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரி சிறிசேனா பேசியதாக ஊடகங்களில் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சிறிசேனா அப்படி ஏதும் பேசவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.

இலங்கையின் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் சிறிசேனா, இந்தியா, இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த இந்திய உளவுத்துறை ரா  முயற்சி செய்து வருவதாக குற்றட்ம சாட்டினார். மேலும், இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  இலங்கை அதிபரின் ஆலோசகரும், ஒருங்கிணைப்பு செயலாளருமான ஷ்ரிலால் லக்திலகா இதுகுறித்து வெளியான செய்தி தவறு என்றும்,  அதிபர் சிறிசேனா மைத்ரிபாலா இதுபோல எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.  ரா உளவாளி திட்டம் எ எனக்கூறி இருநாடுகள் இடையே பிரச்சனை ஏற்படுத்தும்  முயற்சி இது என தெரிவித்தார்

ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ராஜமக்சே தோல்வி அடைந்ததும் இந்திய உளவு அமைப்பு ’ரா’ மீது குற்றம் சாட்டினார். இந்த நிலையில் தற்போது சிறிசேனாவின் குற்றச்சாட்டும் உள்ளதாக அரசியல் விமர்சகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.