என்னை கொல்ல இந்தியா சதி: இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு

கொழும்பு:

ந்திய புலனாய்வு நிறுவனமான ரா (RAW) தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரி சிறிசேனா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனா

இலங்கையின் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் சிறிசேனா, இந்தியா, இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சி செய்து வருவதாக குற்றட்ம சாட்டினார். மேலும், இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆனால், ராவின் இந்த திட்டம்,  இந்தியப் பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபரின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அதிபரின் இத்தகைய பகிரங்கக் குற்றச்சாட்டு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆனால் இந்த விஷயத்தை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இலங்கையின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு  ஆதரவாக செயல்பட்டு வரும் இலங்கை அரசு, இந்தியா மீது  பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளது உலக தலைவர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மிச்சிறந்த நட்பு நாடுகளில் ஒன்றான இலங்கை, இந்தியா மீது பகிரங்கமாக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறியிருப்பது இதுதான் முதன்முறை.  இந்த குற்றச்சாட்டு காரணமாக இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.