இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த காவாங்கரையில் உள்ள  இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது  வர்தா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தமிழக அரசு செய்துள்ள நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பிறகு  புழல் ஏரியை பார்வையிட்ட அமைச்சர், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்தும் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவாங்கரை அகதிகள் முகாமில் பாதிக்கப்பட்ட வீடுகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை” என்றார். மேலும், “தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், சொந்த நாட்டுக்கு செல்வதே இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கும், அவர்களுக்கும் நல்லது” என்று தெரிவித்தார்.

 

கார்ட்டூன் கேலரி