நியூயார்க்:

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடத்தம் பிரபலமான கிம் கர்தாசியன் வேண்டுகோளை ஏற்று  அமெரிக்க சிறையில் இருந்து இலங்கை தமிழர் ஒருவர் இரண்டு ஆண்டு முன்கூட்டியே விடுதலையாகி உள்ளார்.

பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப் பட்டிருந்த இலங்கை தமிழர் வரும் 2021ம் ஆண்டு விடுதலையாக உள்ள நிலையில்,முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிம் கர்தாசியன்                         –                   ராஜ் ராஜரத்தினம்

இலங்கை தமிழரான ராஜ் ராஜரத்தினம் என்பவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் கெலோன் குழுமம் என்ற பங்கு வணிக நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தார். அவர், பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு எஃப்பிஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளால், கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்  10 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதித்தது. இதன் காரணமாகராஜ் ராஜரத்தினம் நிறுவனத்துக்கு  53.8 மில்லியன் டாலர்கள் இருப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ராஜ் ராஜ்ரத்தினத்துக்கு நீரிழிவு பிரச்னை முற்றியதையடுத்து,  சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நோயாளிகள் மற்றும் 60 வயதை தாண்டியவர்கள்,  First Step Act என்ற அமெரிக்க சட்டத்தின்படி   தங்கள் மீதி தண்டனைக் காலத்தை தங்கள் வீட்டிலேயே செலவிடலாம்.

இதுதொடர்பாக தொலைக்காட்சி பிரபலமான கிம் கர்தாசியன் ( Kim Kardashian) அரசுக்கு வேண்டு கோள் விடுத்திருந்தார். மேலும்,  ராஜ் ராஜரத்தினத்தின் மருத்துவர்கள், அவருக்கு விரைவில் டயாலிசிஸ் செய்யப்பட வேண்டியுள்ளது  என்ற பரிந்துரையையும் சுட்டிக்காட்டினார்.

2021இல் வெளியில் வர வேண்டிய ராஜரத்தினம் கடந்த  ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது  ராஜ் ராஜரத்தினம்,  மன்ஹாட்டனிலுள்ள தனது வீட்டில்  குடும்பத்துடன் வசித்து வருவதாக  அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

“கிம்” கர்தாஷியன்  கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ்  என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர். மேலும், அவர் கோடீஸ்வரர் வீட்டு இளம்பெண். மாடல், நடிகை, சமூக ஆர்வலர், தொழிலதிபர் என பல்வேறு முகங்களை கொண்டவர். அமெரிக்காவின் பிரபலங்களில் இவரும் ஒருவர்.