Random image

இலங்கை: விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய பெண் அமைச்சர் ராஜினாமா

கொழும்பு:

இலங்கையில் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சராக இருந்தவர் விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45).


‘‘பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. வடக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என்பதே நமது விருப்பம்’’ என்று யாழ்பானத்தில் கடந்த 2ம் தேதி நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார்.

இந்த கருத்துக்கு சிங்களர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் சட்டத்துக்கு எதிராக பேசிய விஜயகலா பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

ஆளும் கட்சியில் உள்ள எம்.பி.க்களும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாகப் பேசிய விஜயகலாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார். எதிர்ப்பு வலுத்ததால் இது குறித்து விசாரணை நடத்த பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயகலா பதவியை ராஜினாமா செய்தார்.