நான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

கொழும்பு:

லங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே, இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார்

இந்த பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடக்கிறது. புதிய நாடாளுமன்றம் வரும் 20-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி