Random image

‘ஸ்ரீலீக்ஸ்’: தமிழ் திரையுலகில் புயலை கிளப்பி உள்ள ஸ்ரீரெட்டி

சென்னை:

தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் திரையுலகில் புயலை ஏற்படுத்தி உள்ளார். ‘ஸ்ரீலீக்ஸ்’ என்ற பெயரில் தினமும் ஒரு தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பதற்றத்துடனும், பரபரப்புடனும் காணப்படுகிறார்கள்.

திரைப்பட வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம் சாட்டிம், பிரபல தெலுங்கு நடிகர்கள் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவரும்,  தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பாக ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவருமான தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது  ‘ஸ்ரீலீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் திரையுலகில் புயலை கிளப்பி உள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் ஸ்ரீரெட்டி

தனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. இது தமிழ் திரையுலக நேரம் என்றும் கூறி,  முதன்முதலாக தமிழ்திரைப்பட இயக்குனர் முருகதாஸ் மீது குற்றச்சாட்டை அள்ளி வீசிய ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் மீதும், தற்போது ராகவா லாரன்ஸ்மீது குற்றச்சாட்டுக்களை வீசி உள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில், “ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ் ஜி. நலமாக இருக்கிறீர்களா? பசுமையான நட்சத்திர ஓட்டல் நினைவிருக்கிறதா?  என்றவர், தொடர்ந்து,  நடிகர் ஸ்ரீகாந்த் படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, “5 வருடங்களுக்கு முன்னால் ஐதராபாத்தில் ஓட்டலில் நடந்த சி.சி.எல். கிரிக்கெட் விருந்து நினைவிருக்கிறதா என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  நடிகர் ராகவா லாரன்ஸை பற்றியது என்று தகவலை தற்போது வெளியிட்டு புயலை கிளப்பி உள்ளார்.

லாரன்ஸ்குறித்து ஸ்ரீரெட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ஐதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன்.

ஸ்ரீகாந்த் உடன் ஸ்ரீரெட்டி

ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார்.

அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டியில் புயல் தற்போது தமிழ் உரை உலகில் மையம் கொண்டுள்ளதால், இது தமிழ்ப்பட திரை உலகை சேர்ந்தவர்களிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.

லாரன்சுடன் ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்சில் மேலும் யார் யார் பெயர் வெளிவரப் போகிறதோ என்று தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள்  அச்சத்துடனும், பரபரப்புடன் ஒருவருக் கொருவர் கிசுகிசுத்து வருகிறார்கள்.

You may have missed