தேசிய விருது போட்டியில் சாருஹாசன் நடிப்பில் வெளியான ‘தாதா 87’….!

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் , நடிகர் சாருஹாசன் நடிப்பில் வெளியான ‘தாதா 87’ திரைப்படம் தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சாருஹாசனுடன் சரோஜா, ஜனகராஜ், ஆனந்த பாண்டி, ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்துள்ளார் .

ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்நிலையில் தற்போது திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி