2014ம் ஆண்டு பாகிஸ்தான் சிறுமி மலாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.  அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்கக் கூடாது என மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் கடும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் லாத்தூருக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி பிரச்சனைக்கு தற்கொலை செய்வதால் எந்த பிரச்சனையும் தீர்ந்துவிடாது. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்தார்கள். ஆனால் நான் தான் அதை வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் சேவை செய்வதில் தான் மகிழ்ச்சியாக உள்ளேன். அமைதிக்கான நோபல் பரிசு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும்.

மலாலா யூசப்சாய்க்கு நோபல் பரிசு வழங்கியிருக்கக் கூடாது. அது வீணாகிவிடும். நோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா ஒன்றும் செய்யவில்லை.
கைலாஷ் சத்யார்த்தியுடன் நோபல் பரிசை வென்ற மலாலா

தமக்கு எப்படியாவது  அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என பகிரத முயற்சியாய், உலக கலாச்சார கலைநிகழ்ச்சியை மிகுந்த  எதிர்ப்புக்கு இடையில், தில்லியில் நடத்தினார். யமுனை நதிக்கரையில் விழா நடத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்த எதிர்ப்பை பொருட்படுத்தாது, பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராதத்தையும் முழுதாய்க் கட்டாமல் விழாவினை நடத்திக் காட்டினார். எனினும் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவரது கருத்து அவரது பொறாமையைக் காட்டுகின்றது. எனவே, ” வாழும் கலை” கற்றும் எந்த மனிதனுக்கும் ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடாது என்பதற்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு வாழும் உதாரணம் என்றும் மக்கள் முகநூலில் கருத்து தெரிவித்துள்ளனர்.
sri sri featured
2014 ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு, உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும், சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வலியுறுத்தியும் குரல்கொடுத்து வந்த இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் பாகிஸ்தானியப் பெண் மலாலா. இவருக்கு வயது 17 மாத்திரமே. மற்றையவர் இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி. இவருடைய வயது 60.
யூசப்சை மலாலா பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு குடியிருப்புப் பகுதிகளில் பெண் சிறார்கள் பள்ளிக்கு செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் தலிபான்களால் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராடியவர். இதனால் 2012 அக்டோபரில், தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த தருணம் ஒன்றில் தலிபான்களால் நேரடியாக சுடப்பட்டு உயிர் தப்பியவர்.

அதன் விவரம் :
பாகிஸ்தானின் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதி மதவாதத்திலும் பழமைவாதத்திலும் ஊறிப் போயிருந்ததோடு அங்கு வாழும் பெண்களுக்கு  கணக்கிலடங்கா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று, ‘பெண்கள் கல்வி பயிலக்கூடாது’.  சிறுவயதிலேயே பயங்கரவாதிகளின்  அட்டூழியங்களைக் கண்டு வந்த மலாலா, ‘பெண்களின் முன்னேற்றம் கல்வியில்தான் இருக்கிறது’ என்பதை உணர்ந்து , தலிபான்களின்  செயல்களை உலகறியச் செய்யவேண்டும் என்று நினைத்தார்.பிபிசியின் உருது இணையதளத்தில், ‘குல் மகாய்’ என்ற பெயரில் தொடர்ந்து வலைப்பதிவு எழுதி வந்தார். இந்த வலைப்பதிவு பாகிஸ்தான்  பெண்களிடம் விழிப்புணர்வைப் பரப்பியது. முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மீது வஞ்சம் கொண்டார்கள் தலிபான்கள். இன்னொரு பக்கம் மக்கள்  மத்தியில் செல்வாக்கு பெருகத் தொடங்கியது.

பெண் கல்வி, குழந்தைத் திருமணம், சுகாதாரம் என்று பல விஷயங்களில் கவனம் செலுத்திய  மலாலா, ஒரு சமூகப் போராளியாக உருவானார். 2012 அக்டோபர் 9. தோழிகளுடன் பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கி, நடந்து வந்தார் மலாலா.  துப்பாக்கியுடன் வந்த ஒரு தலிபான், மலாலாவின்  தலையிலும் கழுத்திலும் சுட்டுவிட்டுச் சென்றான். தோழிகள் படுகாயம் அடைந்தனர்.  ஒரு நொடியில் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்  மலாலா. பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரவாதத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி பிடித்தனர். பள்ளி மாணவர்கள், மாணவிகள்  எல்லோரும் ‘நான்தான் மலாலா’ என்ற வாசகங்களை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தார்கள்.

கைலாஷ் சத்தியார்த்தி :
இந்தியா சார்பில் நோபல் பரிசு பெற்ற ஐந்தாவது நபர் ஆவார். முன்னதாக ரபீந்திரநாத் தாகூர், சி.வி.ராமன், அன்னை தெராசா, அமர்த்தியா சென் ஆகியோர் நோபல் பரிசு வென்றிருந்தனர். அதோடு சத்தியார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் ஆவார். அன்னை தெராசாவுக்கு முன்னர் கிடைத்திருதது.
ஆனால் இவர்கள் ஐவரிலும் சத்தியார்த்திக்கு உள்ள பெருமை என்னவென்றால், இந்தியாவின் எல்லைக்குள்ளேயே பிறந்து வளர்ந்து அங்கேயே தற்போது வசித்து வரும் நபர்களில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவர் தான். சத்யார்த்தி இந்தியாவில் சிறார்களில் உரிமைகளுக்காக மிக நீண்டகாலமாக போராடி வருகிறார். குறிப்பாக குழந்தை தொழிலாளர்கள் விடயங்களில் அவரது அக்கறை அதிகமாக உள்ளது. புதுடெல்லியை மையமாக கொண்ட அவரது தொண்டு நிறுவனமான Bachpan Bacjp Andolan, சிறார் தொழிலாளர்கள், சிறார் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், சிறார் அடிமைகளாக இருப்பவர்களை மீட்டு வருகிறது.