தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்காக அத்து மீறலா?

வாழும் கலை  அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்காக தஞ்சை பெரிய கோயிலில் அனுமதி இன்றி கொட்டகை போட அனுமதிக்கப்பட்டதா என்ற சர்ச்சையை முகநூலில் சிலர் எழுப்பி வருகின்றனர்.

பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் 11ம் நூற்றாண்டி மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. யுனெஸ்கோவினால், பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.  இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இக்கோயிலில் நாளை வாழும்கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்காக கோயில் பிரகாரத்தில் பெரிய அளவில் கொட்டகை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், முகநூலில் சிலர், “பாரம்பரி சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலில் இப்படி கொட்டகை போடலாமா. இது பழங்கால சின்னங்களை அழிக்கும் செயல் அல்லவா” என்று தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பிரகாரத்தில் கொட்டகை

இந்த நிலையில் தொல்லியல் துறை மற்றும் கோயில் அறங்காவலர் பாபாஜி ஆகியோர் தரப்பில் பேசினோம்.

அவர்கள், “பிரம்மாண்டமான கோயில் பிரகாரம் வெட்டவெளிதான். அங்கு கொட்டகை அமைத்து நிகழ்ச்சிகள் நடப்பது காலம்காலமாக நடந்துவருகிறது. ராஜராஜ சோழன் சதய விழா, பரதநாட்டிய அரங்கேற்றம், ஆன்மிக சொற்பொழிகள் என்று தொடர்ந்து அங்கு கொட்டகை அமைத்து நடப்பது வழக்கம்தான்.  இதற்கு தொல்லியல் துறை ஆட்சேபணை தெரிவி்ப்பதில்லை. தவிர நாளை நடக்க இருப்பது ஆன்மிக நிகழ்ச்சி என்பதால் அனுதி அளிக்கப்ட்டுள்ளது. உரிய அனுமதி பெற்றே கொட்டகை அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது” என்று தெரிவித்தனர்.

#SriSriravishankar #vazhaumkalai #unauthorised #event #inside #Tanjavur #BigTemple