மிழ்,தெலுங்கு, இந்தி என்று கொடிகட்டி பறந்த “மயிலு” ஸ்ரீதேவி, கோடிக்கணக்கான (அந்தக்கால) இளைஞர்களின் கனவு தேவதையாக உலா வந்தவர்.

திருமணம், குழந்தைகள், குடும்பம் என்றான பிறகு, ஃபீல்டை விட்டு ஒதுங்கியிருந்தார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்ஸ “இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். படம், சூப்பர் டூப்பர் ஹிட்.

 

தற்போது ‘மாம்’(அம்மா) எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குநர் ரவி உதயவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இணையதளத்தில் வெளியிட்டனர். வரும் ஜூலை 14ம் தேதி ரிலீஸ்.

இந்த நிலையில் படத்தைப் பற்றிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

அதாவது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிவின் வாழ்க்கையைத்தான் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் அது.

இது குறித்து கேட்டால், பட யூனிட் பதறுகிறது.
“அந்த அம்மா பற்றிய படம் அல்ல. இது வேறு அம்மா பற்றிய படம். அதாவது முழுக்க முழுக்க கற்பனை கதாபாத்திரம்தான்” என்கிறார்கள்.

சரி, படம் வந்தால் தெரிந்துவிடப்போகிறது. ஜூலை 14 வரை காத்திருப்போம்.