ஸ்ரீதேவி மரண வழக்கு: முடித்துவைக்கப்பட்டதாக துபாய் காவல்துறை அறிவிப்பு

துபாய்:

டிகை ஸ்ரீதேவி மரண வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.

உறவினர் திருமணத்துக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு விடுதி அறையில் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக முதலில் தகவல் வெளியானது. உடற்கூறு ஆய்வில் மது போதையில் இருந்த அவர், தடுமாறி குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாக தெரியவந்தது.

இதற்கிடையே ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதை துபாய் காவல்துறை மறுத்தது.

அவரது உடலை இந்தியாவுக்கு எடுத்துவர, அம்பானிக்குச் சொந்தமான விமானம் ஒன்று இங்கிருந்து துபாய்க்கு சென்று காத்திருக்கிறது. இதற்கிடையே பல்வேறு சட்ட நடைமுறைகள் காரணமாக, ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் சட்டநடைமுறைகள் எல்லாம் முடிந்து துபாய் காவல்துறை, ஸ்ரீதேவி உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது.

மேலும், ஸ்ரீதேவி மரண வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published.