ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் சினிமாவுக்கு வருகிறார்..
தமிழில் வெற்றிகரமான நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி,இந்தி சினிமா உலகத்துக்கு சென்று,அங்குள்ள அனைத்து பெரிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார்.
வெளிநாட்டில் ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்த நிலையில்  அவரது வாரிசுகள் அரிதாரம் பூச ஆரம்பித்துள்ளனர்.
ஸ்ரீதேவி- போனிகபூர் தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஏற்கனவே நடிகையாகி விட்டார்.
ஜான்வி கபூர் தங்கை குஷி கபூரும் சினிமாவில் கால்பதிக்கப்போவதாகச் செய்திகள் உலா வந்த நிலையில் அதனை போனிகபூர் உறுதிப் படுத்தியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போனிகபூர் ‘’ எனது இரண்டாவது மகள் குஷி கபூர் சினிமாவில் விரைவில் அறிமுகம் ஆகிறார். ஆனால் அவர் நடிக்கும் படத்தை நான் தயாரிக்கப்போவதில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
‘’பிரபல இயக்குநரின் படம் மூலம் குஷி, திரை உலகத்துக்கு வருவார்’’ எனக் குறிப்பிட்ட போனிகபூர் , அந்த டைரக்டர் பெயரைச் சொல்ல வில்லை.
-பா.பாரதி.