ஊழியர்களுக்கு கொரோனா: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மைய பணிகள் நிறுத்தம்

--

ஸ்ரீஹரிகோட்டா: ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால்  ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கீழ் ஆந்திராவில் ஸ்ரீஹரி கோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் இயங்குகிறது. அதில் பணியாற்றுபவர்கள், சூலூர்பேட்டையில் உள்ள 3 குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

இந் நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 2 பணியாளர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருவரும் உடனடியாக நெல்லூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேரும் கொரோனா பாதிப்புடன் பணியாற்றியதால் மற்றவர்களுக்கும் அந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இந் நிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் அனைத்து பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர ஏனைய சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.