முதல் ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸை வென்ற இலங்கை!

கொழும்பு: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் ஷாய் ஹோப் 115 ரன்கள் அடித்தார். ராஸ்டன் சேஸ் 41 ரன்களும், டேரன் பிராவோ 39 ரன்களும் அடித்தனர். கீமோ பால் 32 ரன்களை சேர்த்தார்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில், அவிஷ்கா பெர்னான்டோ மற்றும் கருணரத்னே ஆகியோர் அரைசதம் அடித்தனர். பெராரா மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா 42 ரன்களை அடித்தனர்.

இறுதியில், 49.1 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 290 ரன்களை எட்டி, 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தற்போது தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.