கொழும்பு

லங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதலாகும். ஒரு வீட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை செய்யச் சென்ற காவல்துறையினர் மூவர் அந்த வீட்டில் இருந்த தற்கொலைப்படையை சேர்ந்தவரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 290 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 500 பேர் ப்டுகாயம் அடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் இதுவரை 24 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து காவல்துறை தகவல் அளிக்கவில்லை.

வெளிநாடு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நாட்டுக்கு உடனடியாக திரும்பி வந்துள்ளார். அவர் இன்று தேசிய பாதுகாப்புக் குழுவுடன் சந்திப்பு நிகழ்த்துகிறார். அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்துக் கொள்கிறார். இந்நிலையில் இலங்கையின் குண்டு வெடிப்பு நிகழ்வு எதிரொலியாக மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகள் தாக்கப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

மரணம்டைந்தவர்களில் பல வெளிநாட்டினரும் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் 5 பேர் இந்தியர் என கூறப்படுகிறது.