12 மீனவர்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் வழக்கு….இலங்கை திட்டம்

கொழும்பு:

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

12 பேர் மீதும் முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. கொழும்பு நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யவுள்ளனர்.

புதிய சட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் இதில் வழிவகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.